Accused pt desk
குற்றம்

திருப்பூர்: வழுக்கி விழுந்ததாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (28). இவருடைய மனைவி சுபா (26). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுடைய மகன் பழனிவேல்ராஜன் (4). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

Child

இந்நிலையில், பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 4 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த திவ்யா, பார்த்தசாரதியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கையில் இருந்த பணம் முழுமையாக காலியான நிலையில், இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன் - மனைவி எனக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து பார்த்தசாரதி, திவ்யா இருவருக்கும் குழந்தை இடையூறாக இருந்ததால் பார்த்தசாரதி திவ்யாவின் 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனை அடித்து துன்புறுத்திள்ளார். இதே போல கடந்த (ஞாயிற்றுக்கிழமை) பழனிவேல் ராஜன் வாந்தி எடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, குழந்தையை தாக்கியுள்ளார். குழந்தையை அடிக்க வேண்டாம் என தடுக்க வந்த திவ்யாவையும், சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

Arrested

பார்த்தசாரதி தாக்கியதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திவ்யாவிற்கும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை பழனிவேல் ராஜன் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சக்காக சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தை பழனிவேல் ராஜன் நேற்று முன்தினம் (செவ்வாய்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், குழந்தை பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது பற்றி கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பார்த்தசாரதி தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து பழனிவேல் ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. தாய் திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளது.