குற்றம்

திருப்பூரில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தினர்... போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

திருப்பூரில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தினர்... போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

kaleelrahman

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி முறைகேடாக தங்கயிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில் முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ள வங்கதேசத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி அருகே சந்தேகப்படும் விதமாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி முறைகேடாக சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்தவர்கள் வங்கதேசத்தினர் என்பது தெரிந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறிய இவர்கள், பனியன் நிறுவனத்தில் வேலை செய்தும், வேலை தேடியும் சுற்றி வந்ததனர். ஆவணங்களின்றி தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஆலமின், 29, அஸ்ரபுல், 24, ஷரிபுல் இஸ்லாம், 22, முகமது அரிப், 22, முகமது ஷயின், 22, குமோன் கபிர், 23, சாய்புல், 22, நஸ்ருலிஸ்லாம், 36, ஆலமின், 19 மற்றும் நஸ்முல், 21 ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.