குற்றம்

திருப்பத்தூர்: மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகாசியில் சரண்

திருப்பத்தூர்: மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகாசியில் சரண்

kaleelrahman

வாணியம்பாடி மஜக நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சரணடைந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த செல்வகுமார் அகஸ்டின், பிரவின்குமார், சத்யா என்கின்ற சத்தியசீலன் முனீஸ்வரன், அஜய் உள்ளிட்ட 6 பேர் தஞ்சாவூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 3ல் நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிவகாசி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ்கண்ணா முன்பு சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை 7நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.