accused pt desk
குற்றம்

பாளையங்கோட்டை: நடுரோட்டில் அரசு செவிலியருக்கு கத்திகுத்து... கணவனே தீ வைத்து எரித்துக்கொன்ற கொடூரம்!

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் அய்யம்மாள் (45) - அக்பர் இப்ராஹிம் தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அய்யம்மாள், அண்ணா நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

செவிலியர் அய்யம்மாள்

இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அய்யம்மாள் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த அவரது கணவர் அக்பர் இப்ராஹிம், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அய்யம்மாளை குத்திக் கொலை செய்துவிட்டு, பின் அவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனை அருகிலேயே நடந்த இந்த கொலை சம்பவத்தை அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். எரிந்த நிலையில் காயங்களுடன் கிடந்த அய்யம்மாள் உடலை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்ததும், அதில்தான் கணவர் அக்பர் இப்ராஹிம் இப்படியொரு கொடூரத்தை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை தேடிவந்தனர்.

Police station

இந்த நிலையில் மனைவியை கொலை செய்த அக்பர் இப்ராஹிம், சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று அங்குள்ள கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கணவன் மனைவிக்கு இடையேயான தகராறு காரணமாகத்தான், அய்யம்மாள் கோவில்பட்டியில் இருந்து மாற்றல் வாங்கி திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நடுரோட்டில் அரசு ஊழியருக்கு நடந்த இந்த கொடூரச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.