வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி தமிழகத்தை சேர்ந்த மூவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி அருகேயுள்ள வனப்பகுதியில், ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரக்கம்பாடி வனப்பகுதியில் சமையல் பொருட்கள், கோடரி உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த 3 கூலியாட்கள் சென்றுள்ளனர். அவர்களை விசாரித்த காவல் துறையினர், அந்த மூவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் இருந்த கோடாரி, மரம் வெட்டும் கருவிகள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பலர் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி, ஆந்திரா காவல் துறையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்ச்சியாக நிகழ்கிறது.