கோயில் பூசாரி போக்சோவில் கைது pt desk
குற்றம்

தேனி: கோயிலுக்குள் வைத்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை...? கோயில் பூசாரி போக்சோவில் கைது!

குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

webteam

செய்தியாளர்: அருளானந்தம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள கோயிலில் திலகர் (65) என்ற முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்கி அவர்களை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அச்சம்பவத்தின்போது, அந்த சிறுமி பதறி அடித்து கோயிலில் இருந்து வந்து நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

கோயில் பூசாரி போக்சோவில் கைது

இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன்பாக கூடினர். இதைத் தொடர்ந்து கோயிலை பூட்டிக் கொண்டு உள்ளேயே பூசாரி பதுங்கி இருந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற பெரியகுளம் வடகரை காவல்துறையினர் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூசாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.