குற்றம்

தேனி: வரதட்சணை கொடுமை புகார் - பெண் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கைது

தேனி: வரதட்சணை கொடுமை புகார் - பெண் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கைது

kaleelrahman

திமுக பெண் கவுன்சிலரை வரதட்சணை கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவரது கணவரை கைது செய்த போலீசார், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு பெண் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் உமாமகேஸ்வரி. இவர், தனது கணவர் வேல்முருகனுடன் கடமலைக்குண்டு நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது கணவர் மீது கவுன்சிலர் உமாமகேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் வேல்முருகன், அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டு தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பலமுறை கணவரை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்றும் இதுதொடர்பாக இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேன்ண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் ஆண்டிபட்டி மகளிர் காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் உமா மகேஸ்வரியின் புகாரில் முகாந்திரம் இருந்ததால் அவரது கணவர் வேல்முருகன் மற்றும் அவரது பெண் தோழி பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வேல்முருகனை கைது செய்துள்ள நிலையில், பிரியாவை தேடி வருகின்றனர்.