குற்றம்

’பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மீனவப் பெண்ணின் நகைகள் அடகுக் கடையில்’ - விசாரணையில் அதிர்ச்சி

’பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மீனவப் பெண்ணின் நகைகள் அடகுக் கடையில்’ - விசாரணையில் அதிர்ச்சி

சங்கீதா

ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள் 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் அணிந்திருந்த வெள்ளி, தங்கம் ஆகிய நகைகளை நகைக் கடையில் அடகு வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் 6 பேரிடம் நடத்திய விசாரணையில், இரண்டு வடமாநிலத்தவர்கள் மீனவ பெண் அணிந்திருந்த மெட்டி, கழுத்தில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் அடகு வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, ராமேஸ்வரத்தில் உள்ள நகைக்கடையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டதோடு, பின்னர் வட மாநிலத்தவர்கள் பணியாற்றிய இறால் பண்ணை மற்றும் மீனவப் பெண்ணை படுகொலை செய்யப்பட்ட இடங்களில் தீவிர ஆய்வு நடத்தினார்.