குற்றம்

காதல் திருமணம் செய்ததால் மகளை காரில் கடத்திய தாய்

காதல் திருமணம் செய்ததால் மகளை காரில் கடத்திய தாய்

webteam

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவர், வீராச்சியூரை மலைகிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் 2 வாரங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, சுகன்யாவின் தாய் திருமணத்தை ஏற்றுகொண்டது போல் வந்து, கணவன் - மனைவியை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, ஃபெலிக்சை அடித்து விரட்டிவிட்டு, சுகன்யாவை வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார். அங்கிருந்து சுகன்யா தப்பி கணவர் வீட்டிற்கு இன்று வந்துள்ளார். அங்குவந்த சுகன்யாவின் தாய் ராமாயி, அடியாட்கள் 3 பேரின் உதவியுடன் காரில் பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச்சென்றுள்ளார். சுகன்யாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, காரை வழிமறித்த பொதுமக்கள் கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ராமாயி உள்ளிட்ட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.