குற்றம்

மின்தடையை சாதகமாக்கி இரவில் கொள்ளை

மின்தடையை சாதகமாக்கி இரவில் கொள்ளை

webteam

ஹெல்மெட் அணிந்த கொள்ளையர்கள் தங்களை காவல் துறையினர் எனக் கூறிக் கொண்டு வீட்டு உரிமையாளரை மிரட்டி 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் சுவாமிமலை அருகே நாககுடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வெகு நேரமாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் சுமார் 10 மணியளவில் ராஜேந்திரன், அவரது மனைவி வசந்தா ஆகியோர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் தங்களை காவல் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு வீட்டை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள்ளே சென்று 3 பீரோக்களை திறக்கச் சொல்லி அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வசந்தா அவரது குழந்தைகள் அணிந்திருந்த நகைகள் என 16 சவரன் நகைகள், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து வசந்தா புகார் அளித்ததையடுத்து சுவாமிமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு 4 பேர் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.