குற்றம்

வித்தியாசமாக மனைவியைக் கொல்ல முயற்சித்த கணவன் கைது

வித்தியாசமாக மனைவியைக் கொல்ல முயற்சித்த கணவன் கைது

webteam

லண்டனில் தனது மனைவியை கொல்ல கணவர் போட்ட வித்தியாசமான சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

லண்டனில் சாலீஸ்புரி பிளான் என்ற சிறிய நகரத்தில் வசித்து வருபவர்கள் எமிலி சில்லர்ஸ் மற்றும் விக்டோரியா தம்பதினர். இதில் விக்டோரியா ஸ்கை டைவிங் செய்யும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்கை டைவிங் செய்வதற்கு சென்ற விக்டோரியாவின் பாராசூட் கடைசி நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரையில் குதிக்கும்போது பாராசூட்டை  விரிக்க முடியாமல் சிரமப்பட்டதால் 4000 அடி உயரத்தில் இருந்து வேகமாக அவர் கிழே விழந்துள்ளார். இந்த விபத்தை விசாரித்த காவல் துறையினர், எமிலி சில்லர்ஸ் தன் மனைவியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் விக்டோரியா ஸ்கை டைவிங் செய்ய குதிப்பதற்கு முன், அவரது பாரசூட்டில் நான் தான் பழுது ஏற்படுத்தி அவரை கொல்ல முயற்சித்தேன் என்று எமிலி காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். மேலும் விக்ட்டோரியாவின் 160,000 ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே இவர் தனது மனைவியை கொல்ல முயற்சித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்திற்காக சொந்த மனைவியையே கொல்ல முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டார். அவருக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்று லண்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.