குற்றம்

ஸ்ரீபெரும்புதூர்: போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வடமாநில தம்பதியர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வடமாநில தம்பதியர் கைது

webteam

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக அசாம் மாநில தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்த்த நசிமாபேகம் (22), அழருல் இஸ்லாம் (24) ஆகிய தம்பதியிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசி, போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.