accused pt desk
குற்றம்

போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த இலங்கை நபர் கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து, போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த இலங்கை நபர் வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kaleel Rahman

இலங்கை ஜாப்னா பகுதியைச் சேர்ந்த ராபின்சன் சார்லஸ் என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்துள்ளார். பின் இலங்கை திரும்பிச் செல்லாத ராபின்சன், இங்கேயே போலியாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை சுரேஷ் என்ற பெயரில் தயார் செய்து வைத்திருக்கிறார்.

Police station

க்யூ பிரிவு போலீசாருக்கு இதுபற்றி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்தி வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ராபின்சன் சார்லஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் போலியான ஆவணங்களைக்கொண்டு இந்திய பாஸ்போர்ட் மூலமாக கனடா செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்த விசாரணைகளில், திருவான்மியூரிலிருக்கும் சிவா என்பவர் தான் தனக்கு இந்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக ராபின்சன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.