தலப்பாகட்டி பிரியாணி  முகநூல்
குற்றம்

திருச்சி | ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன பிரியாணி விநியோகம்... பறிமுதலான 3 கிலோ இறைச்சி!

PT WEB

உறையூரை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் கரூர் சாலையில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி  கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது. இதை அறிந்து கடைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பிரியாணி

ஆனால் பிரியாணி கடை தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், நேராக கடைக்கு சென்று ஆர்டர் செய்த பிரியாணியை காண்பித்துள்ளார் ஆண்ட்ரூ.

அதற்கு கடை ஊழியர்கள் சூடான நிலையில் பேக் செய்ததால்
பிரியாணி கெட்டுவிட்டதாக மலுப்பான பதிலை கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஆண்ட்ரூ, கெட்டுப்போன பிரியாணி  தொடர்பாக உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை
அதிகாரிகளுக்கு  புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் மூன்று கிலோ கெட்டுப்போன இறைச்சி
உணவுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நோட்டீஸ் அளித்த அதிகாரிகள், கடைக்கு அபராதம் விதித்து
எச்சரித்து சென்றனர்.

இந்த விவகாரங்களை வீடியோ எடுக்கக்கூடாது என உணவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.