கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 6 சிறுவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர். சிறார் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் தகவலின்படி, 6 சிறுவர்களும் அந்த சிறுமியை வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது எனவும் அச்சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.