கைது செய்யப்பட்டவர்கள் புதிய தலைமுறை
குற்றம்

சிவகாசி: கோயில் திருவிழாவில் தகராறு - ஜேசிபி உரிமையாளரை கொலை செய்ததாக 6 பேர் கைது

திருத்தங்கல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

webteam

செய்தியாளர்: A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவரது மனைவி பாண்டிச்செல்வி (33). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கருப்பசாமி ஜேசிபி வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துமாரியம்மன் காலனியில் உள்ள கோயில் அருகே கருப்பசாமியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

Arrested

தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீஸார், கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் டிஎஸ்பி சுப்பையா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

கருப்பசாமியை கொலை செய்த முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த ராமர், வீரபாலன், பால்பாண்டி, ஆனந்த், ஜீவா, விக்னேஷ் ஆகிய 6 பேரை திருத்தங்கல் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் தெரியவந்தது என்னவெனில், ‘முத்துமாரியம்மன் காலனியில் கடந்த 5ம் தேதி இரவு ஒரு சமூகத்தினர் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடந்த போது, பைக்கில் வந்த கருப்பசாமிக்கும் வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Accused

இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த கருப்பசாமியை, பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என ரமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராமர், வீரபாலன், பால்பாண்டி, ஆனந்த், ஜீவா, விக்னேஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து கருப்பசாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.’