குற்றம்

மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை செலுத்தாமல் பண மோசடி? கைதான வங்கி மேலாளார்!

மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை செலுத்தாமல் பண மோசடி? கைதான வங்கி மேலாளார்!

webteam

தேவகோட்டையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வாடிக்கையாளர் கொடுத்த புகாரில் பேரில் தனியார் (பரோடா) வங்கி மேலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் இயங்கி வரும் பரோடா வங்கியில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சையது என்பவர் வாடிக்கையாளராக சேர்ந்துள்ளார். இந்நிலையில், சையது காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது பரோடா வங்கியின் மேலாளர் பாலகிருஷ்ணனும் நடை பயிற்சிக்கு வந்துள்ளார். இதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பின் அடிப்படையில் வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன் தனது மகளுக்கு திருமணம் எனக்கூறி சையதிடம் 50 சவரன் நகையும், ரூ.36 லட்சம் பணத்தையும் கடந்த ஆண்டு வாங்கியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பித் தராமல் வங்கி மேலாளர் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த சையது, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார், புகாரில் போதிய ஆதாரம் இருந்ததால் வங்கி மேலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.