குற்றம்

சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 5.7 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது

சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 5.7 கிலோ தங்கம் பறிமுதல் - இருவர் கைது

webteam

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.7 கிலோ தங்கம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த முகமது அப்சல் (32) என்ற பயணியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின் கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போல் திருச்சியைச் சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (66), என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகமாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதனால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.