குற்றம்

நோய்வாய்ப்பட்டு இறந்த காளை: வீட்டில் ஒருவரைபோல் இறுதிச் சடங்கு செய்த விவசாயி

நோய்வாய்ப்பட்டு இறந்த காளை: வீட்டில் ஒருவரைபோல் இறுதிச் சடங்கு செய்த விவசாயி

kaleelrahman

ஓசூர் அருகே உயிரிழந்த காளை மாட்டிற்கு, மனிதர்களுக்கு செய்வதைப்போல் இறுதிச் சடங்குகள் செய்து, விவசாயி குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். 


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பூனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னப்பா. விவசாயியான இவர், கரியன் என்ற பெயரில், காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த காளைமாடு ஒவ்வொரு ஆண்டும், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு வெற்றிபெற்று பல பரிசுகளை வாங்கி வந்துள்ளது. 


இந்நிலையில், நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிய காளை மாடு உயிரிழந்தது. வீட்டில் ஒருவராக வளர்ந்த காளை மாட்டை, தன் விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்த சின்னப்பா, அதற்கு மனிதர்களுக்கு செய்வதுபோல் மேளதாளம், கண்ணீர் அஞ்சலி பேனர், காளையின் உருவம் அடங்கிய கொடிகளை, தன் கிராமத்தில் வைத்து இறுதி சடங்குகளை செய்தார்.

அப்போது, காளை வெற்றி பெற்ற வெற்றிப் பரிசுகளையும் அதனுடன் வைத்திருந்தனர். காளை இறந்ததை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் காளை மாட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது.