குற்றம்

விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பயிற்சியாளர் போக்சோவில் கைது

webteam

பெரம்பலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தற்காலிக பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயின்று விளையாட்டு விடுதியில் தங்கி அருகே இருக்கும் மைதானத்தில் மாணவிகள் பயிற்சி எடுப்பது வழக்கம். இந்த நிலையில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டேக்வாண்டோ மாணவிகளுக்கு தற்காலிக பயிற்சியாளர் தர்மராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கடந்த 7 ந்தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதுங்கி இருந்த, தற்காலிக பயிற்சியாளர் தர்மராஜை, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.