குற்றம்

தேர்வெழுத வந்த மாற்றத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவிக்கு வந்த ஆசிரியர் கைது

தேர்வெழுத வந்த மாற்றத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவிக்கு வந்த ஆசிரியர் கைது

webteam

காஞ்சிபுரத்தில் +1 தேர்வெழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யபட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 பேர் பிளஸ் டூ தேர்வையும் 13,114 பேர் 101 தேர்வு எழுது வருகின்றனர், இந்த தேர்வுக்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பறக்கும் படை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் நியமிக்கப்பட்டு நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் +1 அரியர் தேர்வெழுத வந்துள்ளார்.

அப்போது அந்த மாணவிக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்த நிலையில், அந்த மாணவி, பதட்டத்துடன் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தேர்வு அலுவலரான ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர்; உதவ வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் பாலு செட்டி காவல் நிலையத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் ஆய்வாளர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.