குற்றம்

இபாஸ் ஒட்டப்பட்ட லாரி: கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி - சேஸிங் செய்த பிடித்த அதிகாரிகள்

இபாஸ் ஒட்டப்பட்ட லாரி: கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி - சேஸிங் செய்த பிடித்த அதிகாரிகள்

webteam


ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற லாரியை அதிகாரிகள் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் மாவட்ட சோதனைச்சாவடி உள்ளது. இதில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று தமிழக இ பாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதிவேகமாக வந்ததாகத் தெரிகிறது. இதனை கவனித்த துணை வட்டாட்சியர் குமார் மற்றும் அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் லாரியை நிறுத்த முயன்றுள்ளனர்.ஆனால் லாரி அவர்களை மீறி வேகமாகச் சென்றுள்ளது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் லாரியை துரத்திச் சென்ற அதிகாரிகள் லாரியை மடக்கிப்பிடித்தனர். இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் தப்பித்துச் சென்று விட்டார்.

இதனையடுத்து நடத்தப்பட்டச் சோதனையில் லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதனை ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் அவர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த ஒரு மாதக் காலத்தில் மட்டும் ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரிகள் மூலம் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது