குற்றம்

சசிக்குமார் கொலை வழக்கு: 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

Rasus

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுகுணாபுரத்தில் ஹாரிஸ் என்பவரது வீட்டிலும், பிலால் எஸ்டேட்டில் ஹஜீஸ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் வெள்ளக்கிணற்றில் உள்ள முகமதுஅலி, துடியலூரில் சதாம் உசேன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. என்ஐஏ அதிகாரிகள் நிர்பந்தித்து வாக்குமூலம் வாங்குவதாக கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்திருந்த செலின் ரகுமான் என்பவது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே சுபேர், முபாரக், அபுதாஹிர், சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் மார்ச் 18 தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்து சசிக்குமார் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்படார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.