S.V.சேகர் PT
குற்றம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு-எஸ்.வி.சேகரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

PT WEB

2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அளித்த புகாரில் பேரில், காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி. சேகர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவார் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்? என கேள்வி எழுப்பியதோடு மின்னணு ஊடகங்களில் செயல்படும் போது அதிக கவனம் தேவை எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.

எஸ்.வி.சேகர் மேல்முறையீடு மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு SupremeCourt | sveShekher

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என்றுக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எஸ்.வி.சேகர் தரப்பில், இந்த வழக்கு விசாரணையின் போது ஆன்லைன் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.