குற்றம்

ரூ.300 கோடி வருவாயை மறைத்த சென்னை நிதி நிறுவன குழுமங்கள் - ஐடி சோதனையில் அம்பலம்

ரூ.300 கோடி வருவாயை மறைத்த சென்னை நிதி நிறுவன குழுமங்கள் - ஐடி சோதனையில் அம்பலம்

Sinekadhara

சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு 2 நிதி நிறுவனங்களும் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதும் தெரியவந்திருக்கிறது. பினாமி வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி அதிக வட்டி வசூலித்ததும் தெரியவந்திருக்கிறது. சென்னையில் 35 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது.