குற்றம்

புழல் சிறையிலேயே பிரபல ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல்

Rasus

குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி "பாக்ஸர்" முரளி சக கைதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

புழல் சிறையில் தண்டனைப்பிரிவு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ‌உள்ள கழிவறையில்‌ குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் ‌‌உள்ள ரமேஷ், கார்த்திக், பிரதீப்குமார், ஜோயல் ஆகியோர் "பாக்ஸர்" முரளியின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பை அறுத்துள்ளனர். ‌இதில் பலத்த காயமடைந்த முரளி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முரளி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த‌னர்.

கொல்லப்பட்ட முரளி ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். பிரபல ரவுடியான ‌இவர் மீது சென்னை கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ‌3 கொலை, 5 கொலை முயற்சி மற்றும் 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக முரளி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொலையில் சிறையில் உள்ள சரண் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு முரளியை கொலை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.