நெடுஞ்சாலை திரைப்பட பாணியில் ஒடும் வாகனத்தில் ஏறி கொள்ளை அடிக்கும் கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
கடந்த 2003-ஆண்டு தேவதானபட்டி அருகே ஒடும் வாகனத்தில் ஏறி 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை அடிக்கபட்டது. இது தொடர்பாக தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டியை சேர்ந்த மூட்டிகணேஷ் என்பவரை தேடி வந்தனர். இதனிடையே மூட்டிகணேஷ் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டலை ஒடும் லாரியில் இருந்து திருடி விற்ற குற்றத்திற்காக சில ஆண்டுகளாக கர்நாடகா மாநில சிறையில் இருப்பதை அறிந்த போலீசார் சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக அவரை தமிழகம் அழைத்து வந்தனர்.
இதனையடுத்து தேனி மாவட்டம் லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் மூட்டிகணேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களில் ஏறி தார்பாயை கிழித்து அதில் இருக்கும் பொருள்களை பல ஆண்டுகளாக கொள்ளை அடித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நெடுஞ்சாலை படத்தில் இதே பாணியில் ஒடும் வாகனங்களில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன என்பது குறிப்பிடதக்கது.