குற்றம்

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை நிகழ்ந்தது எப்படி? - நடித்துக்காட்டிய கொள்ளையன்

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை நிகழ்ந்தது எப்படி? - நடித்துக்காட்டிய கொள்ளையன்

Sinekadhara

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்தது எப்படி என போலீசாருக்கு டீக்காராமன் நடித்துக் காட்டியுள்ளார்.

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு உத்தரகாவேரி ஆற்றின் அருகேயுள்ள சுடுகாட்டில் மூன்று இடங்களில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை காவல்துறையினர் தோண்டி எடுத்துள்ளனர். இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுவாக கொள்ளை சம்பவங்களில் கைதானவர்களை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துவந்து எப்படி கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதை நடித்துக்காட்டச் சொல்லி அதனை வழக்காக பதிவுசெய்வது வழக்கம். அதன் அடிப்படையில், சிங்க முகமூடி அணிவிக்கப்பட்டு, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு டீக்காராமன் அழைத்து வரப்பட்டார். கொள்ளை சம்பவம் நடைபெற்றது எப்படி என டீக்காராமன் போலீசாருக்கு நடித்துக் காட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது போல், தரைத்தள சுவரை துளையிட்டு உள்ளே வந்தது எப்படி, சிசிடிவி காட்சிகளில் வண்ண ஸ்ப்ரே அடித்தபிறகு என்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டினார். சுவரை எவ்வாறு துளையிட்டார்? ஃபால் சீலிங் உடைக்கப்பட்டது எப்படி? நகைகளை எடுத்துக்கொண்டு எந்தப்பக்கம் வெளியேறினார் என்பதையும் நடித்துக்காட்டியுள்ளார்.