குற்றம்

கலெக்டர் கார் பதிவு எண் கொண்ட காரில் செம்மர கடத்தல்

கலெக்டர் கார் பதிவு எண் கொண்ட காரில் செம்மர கடத்தல்

webteam

திருப்பதி ரங்கம்பேட்டை  வனப்பகுதியில் இருந்து இன்று காலை செம்மரங்களை வெட்டி  கடத்தல்காரர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட் கலெக்டர் ஒருவரின் கார் நம்பர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருப்பதி அடுத்த ரங்கம் பேட்டை பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய எஸ்.ஐ. வாசு தலைமையில் ரோந்து சென்று கொண்டுருந்தனர். அப்போது  வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த  காரை நிருத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். 

போலீசார் பின் தொடர்வதை அறிந்த கடத்தல்காரர்கள் பாக்ராபேட்டை செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர்கள் வந்த காரை நிருத்தி விட்டு வனப்பகுதியில் தப்பி ஓடினர்.  போலீசார் காரை சோதனை செய்தபோது கடத்தல்காரர்கள் சுமார் ரூ 10 லட்சம் மதிப்புள்ள செம்மரம் இருப்பதை கண்டறிந்தனர்.  செம்மரக்கட்டைகளை கைப்பற்றி பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட காரின் பதிவு எண் மூலம் அந்த கார் யாருடையது என்று போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது காரின் நம்பர் பிளேட்டில் இருந்த AP09 A 9199 பதிவு எண் கொண்ட எண் கலெக்டர் ஒருவரின் அலுவலக ரீதியான பதிவு எண் என்பதும், போலி பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அவர்கள் கடத்தலுக்கு முயன்றதும் தெரிய வந்தது இதுகுறித்து ஐ.ஜி. காந்தாராவ், உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் டி.எஸ்.பி. ஹரிநாத்பாபு, இன்ஸ்பெக்டர் சந்து உள்ளிட்டோர் பங்கேற்று தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.