குற்றம்

போக்சோ வழக்கில் கால்நடைத்துறை காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

kaleelrahman

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கால்நடைத் துறையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தவர் காரை நேரு நகரைச் சேர்ந்த ராஜா (48). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டில் பொம்மை படம் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளானர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ராஜா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு வேலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜா என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவுவிட்டார். இதனையடுத்து ராஜா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.