narcotics seized pt desk
குற்றம்

ராமநாதபுரம்: வாகன சோதனையில் சிக்கிய 700 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை

தடை செய்யப்பட்ட 700 கிலோ போதைப் பொருட்களை ராமநாதபுரத்தில் கேணிக்கரை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்றிரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

narcotics seized

இந்நிலையில், கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான போலீசார், ராமநாதபுரம் நகர்மன்ற பகுதியான கான்சாகிப் தெரு, நாகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக சுமார் 700 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாகனத்தில் இருந்த ஆறு பேரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.