பெரியகுளம் MLA போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டியவர் கைது pt desk
குற்றம்

பெரியகுளம் திமுக MLA செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய நபர்! களத்தில் இறங்கிய சைபர் கிரைம்!

பெரியகுளம் திமுக எம்எல்ஏ மொபைல் போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டி ரூ.10,000 பணத்தை பறித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஷத் என்பவரை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.

webteam

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், தற்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் சரவணக்குமார். கடந்த ஜூலை 1ஆம் தேதி இவரது மொபைல் போனில் வீடியோ காலில் தொடர்பு கொண்ட ஒருவர், பேசாமல் சிறிது நேரத்தில் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சில மணி நேரத்தில், எம்எல்ஏ சரவணக்குமாரை தொடர்புபடுத்தி ஆபாச வீடியோவொன்று அதே நம்பரில் இருந்து வந்துள்ளது.

பின், இந்த வீடியோ பரவாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு பணம் தர வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏ. சரவணக்குமார் அவர் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ஜூலை 3 ஆம் தேதி 5,000 ரூபாயும், 8ஆம் தேதி மேலும் 5,000 ரூபாயும் என மொத்தம் 10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர், தொடர்ந்து எம்எல்ஏ சரவணக்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார்.

MLA சரவணக்குமார்

இந்நிலையில், இதுகுறித்து தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சரவணக்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாணையை துவக்கினர். இதையடுத்து எம்.எல்.ஏ சரவணக்குமாருக்கு வீடியோ கால் வந்த மொபைல் எண், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவற்றைக் கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த நபர் ராஜஸ்தானில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜஸ்தான் விரைந்த போலீசார், அங்குள்ள உள்ளூர் போலீசார் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட அர்ஷத் என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த அர்ஷத், தற்போது ஆபாச வீடியோக்களை உருவாக்கி அதை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

theni sp office

இதைத் தொடர்ந்து அர்ஷத்தை தமிழகம் அழைத்து வர தேனி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, நிர்வாண பெண்ணுடன் தான் பேசும் சித்தரிப்பு வீடியோவை காட்டி மிரட்டியவர் மீது எம்.எல்.ஏ சரவணக்குமார் உடனே புகார் அளிக்காமல், மிரட்டய நபருக்கு பணம் அனுப்பியது ஏன் என்ற கோணத்திலும் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.