குற்றம்

தொழிலதிபர்களின் பொழுதுபோக்காக மாறும் சூதாட்டம்

தொழிலதிபர்களின் பொழுதுபோக்காக மாறும் சூதாட்டம்

webteam

வெவ்வேறு நகரங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் 32 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியாதினா நகரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 32 தொழிபதிபர்கள் கூட்டாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலிஸார் ரூ.32 லட்சம் ரொக்கத்தையும், 40 ஸ்மார்ட் போன்களையும் பறிமுதல் செய்தனர். 

இதைத்தொடர்ந்து ஓட்டல் நிறுவனத்திடம் போலீஸார் மேற்கொண்ட விசாரனையின் போது, தங்கள் வளாகத்தில் சூதாட்டம் நடைபெற்றது அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது என நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சூதாட்டம் நடைபெறுவது தெரிந்திருந்தால் கட்டாயம் அனுமதித்திருக்க மாட்டோம் என்றும், இதில் தங்கள் ஊழியர்கள் யாரேனும் ஈடுபட்டிருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

நாட்டில் நிதிநெருக்கடியும், வெள்ள பாதிப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்கே பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் பணத்தை பெருக்கிக் கொண்டு செல்லும் தொழிலதிபர்களோ, அவற்றை செலவு செய்ய வழி தெரியாமல் சூதாட்டம், முறைகேடுகள் போன்றவற்றில் கூட்டாக ஈடுபட்டு பொழுது போக்குவது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண வாகன ஓட்டிகளை கண்காணிக்க பல்வேறு சட்டங்களை இயற்றும் அரசுகள், லட்சக்கணக்கான ரூபாய்களை துட்சமாக எண்ணி முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.