குற்றம்

முறையற்ற உறவால் பெண்களை கொன்ற சைக்கோ !

முறையற்ற உறவால் பெண்களை கொன்ற சைக்கோ !

webteam

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முறையற்ற உறவு காரணமாக இரண்டு பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மாள். இவர் சில நாட்களாக முன்பு காணாமல் போனதால் பல இடங்களில்  தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவரது மகன் கார்த்திக் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தார். புகாரில் அடிப்படையில் காவல்துறை தேடி வந்த நிலையில் நேற்று பெரும்புகை மலை பகுதியில் துர் நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மலைக்குச் சென்று பார்த்த போது குகையில் அழுகிய நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. விசாரணையில் அது மாயமான குட்டியம்மாள்தான் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரனையில் மேற்கொண்ட காவல்துறை, குட்டியம்மாள் தனது அண்ணன் மகன் தேவந்திரன் உடன் முறையற்ற உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்த காவல்துறையினர் தேவந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதில் தேவேந்திரன் செய்த இரண்டாவது கொலை இது என்பதும் முதல் கொலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

தேவேந்திரன் கடந்த 2 வருடங்ககளுக்கு முன் செஞ்சி அருகே நாட்டார்மங்களம் கிராமத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். அதனை அறிந்த தேவேந்திரனின் மனைவி கலைவாணி கண்டித்துள்ளார். மேலும் “அவளுடன் தொடர்பை துண்டித்து வா உன்னோடு வாழ்கிறேன்” என கலைவாணி கூறியுள்ளார். இதனால் தேவேந்திரன், சுமதியை பெரும்புகை மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக முறையில் கொலை செய்து, அதனை தன்னுடைய செல்போனில் படம் பிடித்து தன் மனைவி கலைவாணியிடம் காண்பித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன மனைவி கலைவாணி அந்த மெமரிகார்டை அவனிடமிருந்து கைப்பற்றி மறைத்து வைத்திருந்தார். 

இந்தச் சூழலில் தேவேந்திரன் தனது சொந்த அத்தை குட்டியம்மாளுடன் கள்ள தொடர்பு வைத்து முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த மனைவி கலைவாணி தேவேந்திரனை கண்டித்துள்ளார். பின் தேவேந்திரன் தனது அத்தையையும் கொடூரமான முறையில் தலையில் கல்லால் சிதைத்து கொலை செய்துள்ளார். தேவேந்திரன் கொலை செய்து விட்டு கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார் என்று தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையற்ற உறவால் இரண்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.