குற்றம்

சென்னை: ரவுடி பேபி சூர்யாவை கைதுசெய்யக்கோரி கமிஷனர் அலுவலம் முன்பு சாலைமறியல்

சென்னை: ரவுடி பேபி சூர்யாவை கைதுசெய்யக்கோரி கமிஷனர் அலுவலம் முன்பு சாலைமறியல்

Sinekadhara

டிக்-டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை உடனடியாக கைது செய்யக்கோரி வேளச்சேரியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டதாக கூறும் 10க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் போராட்டம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

டிக்-டாக் மூலம் பிரபலமானவர் ரவுடிபேபி சூர்யா. தனது யூடியுப் சேனலில் இவர் அநாகரிகமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி பேபி சூர்யாவை கைதுசெய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என வேளச்சேரியைச் சேர்ந்த ஜெனிபர் என்பவர் கமிஷ்னர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ரவுடி பேபி சூர்யாவை உடனடியாக கைது செய்யக்கோரி ஜெனிபர் உள்பட பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பாக இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர், சமூக வலைத்தளத்தில் தனக்கு வெளிப்டையாக கொலைமிரட்டல் விடுத்ததற்காகவும், தனது மகள் மற்றும் தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து வெளியிட்டு விடுவதாக மிரட்டியதற்காகவும் இருமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஜெனிபர் குற்றச்சாட்டினார். இந்த சாலைமறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை கலந்து செல்ல முயற்சித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.