குற்றம்

’குதிரை வால்’ ஜடை போடுவதா? மாணவியை கதற கதற அடித்த பிரின்சிபல்!

’குதிரை வால்’ ஜடை போடுவதா? மாணவியை கதற கதற அடித்த பிரின்சிபல்!

webteam

ஸ்கூல் வழக்கப்படி தலைமுடியை பின்னாமல், குதிரை வால் போட்டபடி வந்த மாணவியை பிரின்சிபல் அடித்து உதைத்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

மும்பை அருகே உள்ள கல்யாணில் இருக்கிறது, கேப்டன் ரவிந்திர மாதவ் ஓக் உயர் நிலைப்பள்ளி. இதன் பிரின்சிபல், மேதா குல்கர்னி. கறாரான இவர், தினமும் காலையில் ஸ்கூலுக்கு வந்ததும் ஒவ்வொரு வகுப்புக்கும் ரவுண்ட்ஸ் செல்வார். அப்போது ஸ்கூல் ஷூவை சரியாக மாட்டாமல் வந்திருப்பவர்கள், தலைமுடியை ஜடை பின்னாமல் வந்திருக்கும் மாணவிகளை அவர் தண்டிப்பார்.

இந்நிலையில் நேற்று முன் தினமும் அப்படி சென்றார். எட்டாம் வகுப்புக்கு வந்த அவர், தலைமுடியை சரியாகக் கட்டாதவர்களை வெளியே வரச் சொன்னார். நான்கு மாணவிகள் வந்தனர். அதில் ஒருவர், வர்ஷா (14). வகுப்புக்கு வெளியே வந்த அந்த 4 பேரையும் கம்பால் அடிக்கத் தொடங்கினார். இதில் வர்ஷாவின் பெரு விரல் கிழிந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இருந்தும் விடாமல் அடித்தாராம் பிரின்சிபல்.

வீட்டுக்கு வந்த வர்ஷா, அழுதபடி இருந்துள்ளார். ’கையில் என்ன காயம்?’ என்று கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. பிறகு அவரது தந்தை பூஷன் வந்து கேட்டபிறகு உண்மை தெரிய வந்தது. இதையடுத்து வர்ஷாவுடன் அடிவாங்கிய மாணவிகளை சந்தித்தார் பூஷன். அவர்களுக்கும் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசில் புகார் செய்தார் பூஷன். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பூஷன் கூறும்போது, ’மாணவிகளை, பிரின்சிபல் கண்டிப்பதை வரவேற்கலாம். படிக்காத மாணவிகளை அனைத்து ஆசிரியர்களுமே கண்டிக்கிறார்கள். ஆனால் முடியை சரியாகக் கட்டவில்லை என்பதற்காக, ரத்தம் வரும் வரை அடிப்பது என்ன நியாயம்? அல்லது இது சரியான காரணமா?’ என்று கேட்டுள்ளார்.