குற்றம்

ஏடிஎம்மில் டெபாசிட் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்..சிக்கியவர் விசாரணையில் சொன்ன ஷாக் விளக்கம்

ஏடிஎம்மில் டெபாசிட் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்..சிக்கியவர் விசாரணையில் சொன்ன ஷாக் விளக்கம்

Sinekadhara

சென்னையில் கள்ளநோட்டை ஏடிஎம்மில் டெபாசிட் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எச்.டி.எப்.சி வங்கியுடன் கூடிய ஏடிஎம் மையம் உள்ளது. இதில் கடந்த 11ஆம் தேதி இரவு 10 மணியளவில் 14000 ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதில் 28 தாள்கள் அடங்கிய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.14000 இருந்தது. இது தொடர்பாக வங்கியின் மேலாளர் லதா என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்த நபர்களை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் நாங்கள் பணம் டெபாசிட் செய்ய சென்றபோது பணம் டெபாசிட் செய்யத்தெரியாததால் ஏடிஎம் மையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் ஏடிஎம் கார்டு கொண்டுவரவில்லை எனக் கூறி, 14000 ரூபாயை தங்களது ஏடிஎம் கார்டை பயன்டுத்தி டெபாசிட் செய்ததாகவும், அந்த பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு ஒரு எண்ணை கொடுத்துவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் டெபாசிட் செய்த பணம் வங்கிக்கணக்கில் காட்டவில்லை என காவல் நிலையத்திற்கு வந்த எப்ஸீ மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.