திருத்துறைபூண்டி அருகே 8 கோடி ரூபாய் மதிப்பிலான, திமிங்கலத்தின் உமிழ்நீரை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 2 பேரை நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
முத்துப்பேட்டையிலிருந்து வெளிநாடுகளுக்கு, திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, உப்பூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 8 கிலோ அளவிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ஜாகிர் உசேன் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நிஜாமுதீன் என்பவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்த திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு எட்டு கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காக, திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தப்படுவதாக தெரிகிறது.