குற்றம்

மதுரை: அத்துமீறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - தட்டிக்கேட்டதால் பேருந்து கண்ணாடி உடைப்பு

மதுரை: அத்துமீறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - தட்டிக்கேட்டதால் பேருந்து கண்ணாடி உடைப்பு

Sinekadhara

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைமுன்பு பேருந்துமீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாட்டுத்தாவணியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி பயணிகளை ஏற்றிவந்த அரசு பேருந்துகள்மீது ஏறி நடனமாடி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனை அங்கிருந்தோர் தட்டிக்கேட்டதால் இளைஞர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். அதில் பேருந்து ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதில் தேவர் சிலை முன்பு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் அனைத்து இளைஞர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.