குற்றம்

கேமராவில் சிக்கிய திருட்டு கும்பல் - சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

கேமராவில் சிக்கிய திருட்டு கும்பல் - சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

webteam

சென்னையில் நகை மற்றும் துணிக் கடைகளில் கும்பல் ஒன்று திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.  

சென்னையில் உள்ள துணி கடைகளில் உள்ள அறையில் முதலாவதாக தம்பதிகள் இருவர் செல்கின்றனர். பின்னர் அடுத்தடுத்து வாலிபர்கள் செல்கின்றனர். அதன் பின்னர் ஒருவர் குழந்தையை தனது தோலில் சாய்த்தபடி கடையினுள் செல்கின்றார். கடையினுள் சென்ற ஒரு பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் துணிகளை பார்ப்பதுபோன்று நடிக்கும் அவர்கள் வியாபாரி அசந்த நேரம் பார்த்து ஏராளமான துணிகளை வியாபாரிக்கு தெரியாமல் திருடி செல்கின்றனர். இந்த காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதேபோல் சென்னையில் உள்ள மற்றொரு நகை கடைக்கு அதே தம்பதிகள் முதலில் சென்று வியாபாரிடம் நகைகளை பார்ப்பதுபோன்று நடிக்கின்றனர். பின்னர் அடுத்தடுத்து 2 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கடையினுள் நுழைகின்றன. வியாபாரியை மறைத்தபடி கடையினுள் இருக்கும் தங்க நகையின் பாக்ஸ் ஒன்றை திருடிய பின்னர் அனைவரும் கடையில் இருந்து வெளியேறும் காட்சி அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைபற்றி 6 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செயல்கள் அதிகளவில் சென்னையில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க இந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.