ஏ.டி.எம்.மில் நூதன முறையில் பணத்தை திருடிய ஹரியானா கொள்ளையனை சென்னை கொண்டுவந்த காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலடைத்தனர்.
சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் சென்சாரை குழப்பி லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி காட்சிகளில் கண்டுபிடித்த காவல்துறை தனிப்படையினர், அமீர் என்பவரை ஹரியானாவில் கைதுசெய்தனர். அவரை விமானம் மூலம் சென்னை கொண்டுவந்த தனிப்படையினர், சென்னை ராயலா நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணா நகரில் உள்ள பூவிருந்தவல்லி நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில், சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அமீரின் கூட்டாளிகள் குறித்த விவரங்களை அறிய, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.