குற்றம்

பிறந்த குழந்தையை ஓடும் ஆட்டோவிலிருந்து தூக்கிவீசிய பெண் கைது

Sinekadhara

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி ஓடும் ஆட்டோவிலிருந்து பிறந்த குழந்தையை தூக்கிவீசிய பெண்ணை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

வீடுகள் நிறைந்த பகுதியில் சாலையோர நடைபாதையில் விழுந்த குழந்தை அதிர்ட்ஷவசமாக உயிர் தப்பியுள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய அங்குள்ள மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் குழந்தையை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். பிறகு குழந்தையின் தாயாரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸார், அந்தப் பெண் பிந்திபுரோலு கிராமத்தைச் சேர்ந்த மரபோயினா சைலஜா என்று கண்டறிந்துள்ளனர்.

விசாரித்ததில், அந்தப் பெண்ணுக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஏற்கெனவே ஒரு பெண்குழந்தை இருக்கிறது. செப்டம்பர் 17ஆம் தேதி அவருக்கு மீண்டும் பெண்குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தை 1.6 கிலோகிராம் எடையில் பிறந்ததால், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருக்கின்றனர். அதனால், அவருடைய கணவர் மற்றொரு பெண்குழந்தையை தன்னால் வளர்க்கமுடியாது எனக் கூறிவிட்டதால், அந்தக் குழந்தையை கொன்றுவிட முடிவெடுத்திருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணின் தாயாரும் இந்தக் குழந்தை வேண்டாம் எனக் கூறிவிட்டதால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

பிறந்த குழந்தையை தூக்கி வீசிய குற்றத்திற்காக சைலஜாவை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.