கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநில நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
ஓசூரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியார் இருப்பதை தெரிந்துகொண்ட 5 பேர் கொண்ட வட மாநில கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றனர். இவர்களை கண்டதும் அப்பெண் பதறியடித்தபடி கூச்சலிட்டிருக்கிறார். இதனையடுத்து அங்கு விரைந்த அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டினர். இதில் 4 பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அந்நபரை மீட்டனர். அவர் அசாமைச் சேர்ந்த சஜ்ஜு என்பதும், லால் என்ற இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து 5 பேர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
ஓசூரில் வீட்டில் தனியாகயிருக்கும் பெண்கள் மற்றும் சாலைகளில் தனியாக நடந்து வரும் சிலரிடம் கத்தியை காட்டி இக்கும்பல் தொடர் கொள்ளையில் இதற்கு முன்னதாக ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.