மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 58 கோடி ரூபாயை இழந்ததாக காவல் துறையில் புகார் அளித்தார். அதன்படி, விசாரணை நடத்திய காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆனந்த்(எ) நவரத்ன ஜெயின் என்ற இடைத்தரகர் தொழிலதிபரை அணுகி ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என்று கூறி பலமுறை அவரை வற்புறுத்தியுள்ளார், இவரின் தொடர் வற்புறுத்தலினால் சூதாட்டத்தில் சேர முடிவு செய்த தொழிலதிபர், அதற்காக ரூ.8 லட்சத்தை ஹவாலா மூலம் அனுப்பியுள்ளார்.
பிறகு வாட்சப்பின் மூலமாக ஆனந்த் அனுப்பிய லிங்க்கை சென்று பார்க்கவே அவர் கொடுத்த தொகையான ரூ.8 லட்சம் அவரது பெயரில் பதிவாகி இருந்தது.
பிறகு சூதாட்டதில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு சிறிது சிறிதாக ரூ.5 கோடி கிடைத்தது. இதனால், வெற்றியடந்ததாக எண்ணிய இவருக்கு கிடைத்தது தோல்வி மட்டுமே. இதனால், 58 கோடி ரூபாயை இழக்க நேரிட்டது. சந்தேகம் அடைந்த இவர் ஆனந்திடம் தனது பணத்தை கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை கொடுக்க மறுக்கவே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இவர் அளித்த புகரின் பேரில் சோதனையை தொடங்கிய போலிசார் கோண்டியா என்ற இடத்தில் இடைத்தரகர் தங்கியிருந்த இருப்பிடத்தை கண்டறிந்தனர். அங்கு சென்று சோதனை நடத்தியதில் 17 கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்கள், 200 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனந்த் ஜெயின் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குறிப்பு: அதிக பணம் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தால் முறைக்கேடான வழிமுறைகளில் சிலர் பணம் சேர்க்க ஆசைப்படுகின்றனர். பணம், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் என்றும் கவனமுடன் முடிவுகளை எடுக்க வேண்டும், இல்லையெனில் பேராசை பெரும் நஷ்டமாக மாறிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
- ஜெனிட்டா ரோஸ்லின்