குற்றம்

ஒரு பவுன் தங்க செயினுக்காக புதுப்பெண் கொலை... சிவகாசியில் நடந்த கொடூரம்!!

ஒரு பவுன் தங்க செயினுக்காக புதுப்பெண் கொலை... சிவகாசியில் நடந்த கொடூரம்!!

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பெரியார் காலனியில் புதுப்பெண் 1 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எதிர் வீட்டில் வசிப்பவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்... 

கடந்த 8ம் தேதி சிவகாசி அருகேயுள்ள பெரியார் காலனியில் திருமணமாகி 1 மாதமே ஆன பிரகதி மோகினி ( 24) என்ற இளம்பெண் கழுத்தறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அதே தெருவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் எதிர்வீட்டில் வசித்துவரும் கோடீஸ்வரன் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கோடீஸ்வரனும் சேகரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் பணி புரிந்து வருகின்றனர்.

கொரோனா நோய்தொற்றால் போடப்பட்டுள்ள ஊரங்கால் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் வருமானம் இன்றி சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், கோடீஸ்வரன் தனது எதிர் வீட்டில் ஒரு பெண் புதிதாக திருமணம் முடிந்து நிறைய நகைகளோடு வந்துள்ளது அங்கு சென்று கொள்ளை அடிப்போம் என்று தனது நண்பர் சேகருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இருவரும் சம்பவம் நடந்த அன்று மதியம் பிரகதி மோகினியின் வீட்டிற்குள் சென்று கழுத்தை நெறித்து நகையை பறித்துள்ளனர். ஆனால் பிரகதி மோகினி செயினை பறிக்க விடாமல் தொடர்ந்து போராடியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் மோகினியின் கழுத்தில் வெட்டியுள்ளனர்.

பின்னர் கழுத்தில் இருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு யாருக்கும் சந்தோகம் வராதபடி தனது வீட்டிற்கு சென்று நகை மற்றும் அரிவாளை மறைத்து வைத்து விட்டு இரண்டு பேரும் தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு வழக்கம் போல பணிக்குச் சென்று விட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோடீஸ்வரனின் தாய் காவல்துறையிடம் சம்பவம் குறித்து நடித்து காட்டிய விவகாரம் காவல்துறைக்கு சந்தேகத்தை எற்படுத்தியது.

இந்நிலையில்தான் போலீசார் அவரது மகனை பிடித்து விசாரணை செய்ததில் கொலை செய்ததை கோடீஸ்வரன், சேகர் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் இருவரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.