குற்றம்

உறவினருடன் அவசரமாக பேச வேண்டும்: நூதன முறையில் செல்போனை திருடிய இளைஞருக்கு தர்ம அடி

உறவினருடன் அவசரமாக பேச வேண்டும்: நூதன முறையில் செல்போனை திருடிய இளைஞருக்கு தர்ம அடி

kaleelrahman

புதுக்கோட்டையில் உறவினருடன் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை கேட்டு வாங்கி தப்பி ஓடிய இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார்.

ராணியார் அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்த முஜிபூர் ரகுமான் என்பவரிடம் முருகேசன் என்பவர், தனது உறவினரிடம் அவசரமாக பேச வேண்டுமெனக் கூறி செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் செல்போனை காதில் வைத்தவாறே சிறிது தூரம் நடந்து சென்ற முருகேசன், திடீரென ஓட்டம் பிடித்தார்.

செல்போன் திருடு போனதை அறிந்த முஜிபுர் ரகுமான், அருகில் இருந்த செல்போன் கடையில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளர், வாட்ஸ் அப் குழுவில் அனைத்து செல்போன் கடை உரிமையாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே சாகுல் ஹமீது என்பவரின் கடைக்கு சென்ற முருகேசன், தனது செல்போனின் லாக்கை எடுக்க வேண்டுமென கொடுத்துள்ளார். அது திருடப்பட்ட செல்போன் என்பதை உறுதி செய்த கடைக்காரர் முருகேசனை மடக்கி பிடித்துள்ளார்.

இதையடுத்து முஜிபூர் ரகுமான் உள்ளிட்டவர்கள் முருகேசனுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.