Govt School pt desk
குற்றம்

நாமக்கல் | அரசுப் பள்ளியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்ற நபர்.. விசாரணையில் வெளிவந்த உண்மை!

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் மனிதக் கழிவுகளை வீசியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

webteam

செய்தியாளர்: துரைசாமி

எருமைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுவர் மற்றும் சத்துணவு கூடத்தில், மனிதக் கழிவுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

Police station

இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், எருமைப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர். பள்ளி சமையலர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் துரைமுருகன் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் பள்ளி சுவரில் ஏறிகுதித்து அவர் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.