அ.தி.மு.க நிர்வாகி வடிவேல்  file image
குற்றம்

"இதற்குக் காரணம் நீங்கள்தான்" அரசு அதிகாரியை மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி - என்ன நடந்தது?

கீழ்வேளூரில் மகளிர் உரிமத்தொகை வரவில்லை எனக் கூறி கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

PT WEB

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் தீபிகாகாந்தி. இவர் அலுவலகத்தில் பணியிலிருந்த போது திருக்கண்ணங்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி வடிவேல் (வயது 42 ) என்பவர் அங்கு வந்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை

அங்கு வடிவேல் மதுபோதையில் வந்து கிராம நிர்வாக அலுவலரான தீபிகாகாந்தியிடம், "என் மனைவி பெயருக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம்" என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தீபிகா காந்தி, வடிவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் விடுத்தல் உட்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

வடிவேல்

அரசு அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலருக்கு அ.தி.மு.க நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.