குற்றம்

குடிப்பழக்கத்திற்கு எதிர்ப்பு: மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்

குடிப்பழக்கத்திற்கு எதிர்ப்பு: மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்

webteam

உத்தரபிரதேசத்தில் 58 வயதான நபர் ஒருவர் தனது மருமகனால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் முழஃபா நகரை சேர்ந்தவர் விபின் குமார். இவருக்கு அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடித்துவிட்டு தினமும் தம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த விபின் குமாரின் மாமனார் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தினமும் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிக குடிபோதையில் இருந்த விபின் குமார் ஆத்திரமடந்து தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபின் குமாரை கைது செய்து கொலை செய்ய உபயோகப்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.