குற்றம்

ம.பி: மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

ம.பி: மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

webteam

மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு நபரை எவ்வித விசாரணையின்றி 12 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம் இந்தூரில் நேற்று முன்தினம் போலீசார் ஒரு இறைச்சி கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதாக சப்-இன்ஸ்பெக்டர் சீமா தக்காத் தெரிவித்தார்.

மேலும், “ஆட்டிறைச்சி விற்பனை செய்வதாக கூறி மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எங்கிருந்து மாட்டிறைச்சி கிடைத்தது, யாருக்கு விற்கிறார் என்று கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.